விராட் கோஹ்லியை நாட்டை விட்டு துரத்த வேண்டும்: வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறிய விராட் கோஹ்லியை தான் நாட்டை விட்டு துரத்தி அனுப்ப வேண்டும் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தன்னுடைய பிறந்த நாளன்று இணையதளவாசிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது விராட்கோஹ்லியின் பேட்டிங்கை விட, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பேட் செய்வது தான் எனக்கு பிடிக்கும் என ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு காட்டமாக பதிலளித்த விராட் கோஹ்லி, இந்த கருத்தை கூறிய ரசிகர் இந்தியாவில் வசிப்பதை விட, நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது வசிக்கலாம் என பதிலளித்திருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் விராட் கோஹ்லிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதில் அப்துல் பாஷித், "இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் கோலி, வெளிநாட்டு கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கிறார். கோஹ்லி கூறிய கூற்றுப்படி பார்த்தால், கோஹ்லி நாட்டை விட்டுத் துரத்தி ஸ்பெயின் அல்லது ஜேர்மனிக்கு அனுப்ப வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர், "கடந்த 2008-ம் ஆண்டில் எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் ஹெர்ஸ்லே கிப்ஸ் என்று கோஹ்லி கூறினார். அப்படியென்றால், கோஹ்லியைத் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவிடலாமா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்