இந்திய அணி கேப்டனிடம் இருந்து இப்படி ஒரு முட்டாள்தனமான வார்த்தைகளா? நடிகர் சித்தார்த் கண்டனம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் நாட்டை விட்டு வெளியேறும்படி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் சித்தார்த் அவருக்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

ரசிகர் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர்களை விட வெளிநாட்டு வீரர்களின் பேட்டிங் தான் தனக்கு பிடிக்கும் என்று கூறியதற்கு பதிலளித்த கோஹ்லி, வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை விரும்புபவர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்று தெரிவித்திருந்தார்.

கோஹ்லி இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ் நடிகர் சித்தார்த்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கோஹ்லிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நீங்கள் இனிமேலும் கிங் கோஹ்லி என்ற அடைமொழியை தக்க வைத்துக் கொள்ள விரும்பினீர்கள் என்றால், உங்களுக்கு நீங்கள் பாடம் கற்பித்துக் கொள்ளும் தருணம் வந்துவிட்டது என்றே அர்த்தம்.

அடுத்த முறை எதிர்காலத்தில் இது போன்ற சூழலில் டிராவிட்டாக இருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பதை யோசித்துப் பேசுங்கள். இந்திய அணியின் கேப்டனிடமிருந்து இப்படி ஒரு முட்டாள்தனமான வார்த்தைகளா?’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்