ஒரு ரன் எடுப்பதற்காக 63 நாட்கள் காத்திருக்கும் டோனி: ஏன் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை தொட டோனிக்கு ஒரு ரன்னே இன்னும் தேவையாக உள்ளது.

இந்த ஆண்டு, இதுவரை 13 இன்னிங்ஸில் விளையாடியுள்ள டோனி 275 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 25-ஐ தாண்டவில்லை.

அவரின் சொதப்பலான ஆட்டம் ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2020 டி-20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியைத் தயார்படுத்துவதோடு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால், வெஸ்ட் இண்டீஸ் - அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி-20 தொடர்களில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

329 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ள டோனி,லோயர்- மிடில் ஆர்டரில் களம் இறங்கி, 9,999 ரன்களை எடுத்துள்ளார்.

இன்னும் 1 ரன் எடுத்தால், சர்வதேச போட்டிகளில் அவர் 10,000 ரன்களை தொட்டு சாதனை படைப்பார்.

இந்த சாதனை நிறைவேற டோனி இன்னும் 63 நாள்கள் காத்திருக்க வேண்டும்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, டெஸ்ட், டி-20, ஒரு நாள் தொடர்களில் பங்கேற்கிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 12-ம் திகதி நடைபெற உள்ளது

தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் டோனிக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், 2019-ம் ஆண்டில் அவரின்10,000 ரன் மைல்கல் உறுதியாகும்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers