அவர்களின் செயற்பாடுகள் என்னை விரக்தியடையச் செய்தது: முத்தையா முரளிதரன்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை அரசியல் குறித்து முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ள கருத்து சமூகவலைதளங்களில் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

முத்தையா முரளிதரன் கூறியதாவது, நாட்டில் பெரும்பாலான மக்கள் அரசியல்வாதிகளிடம் கேட்பது ஜனநாயகத்தையோ, தமது உரிமைகளையோ அல்ல.

மாறாக மூன்று வேளையும் உண்பதற்கு உணவும், தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கு வாய்ப்பளிக்கும் பொருளாதார வசதியினையுமே கேட்கின்றனர்.

கிரிக்கெட் மட்டுமன்றி, தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அவசியம் எனத் தொடர்ந்து கூறிவருகின்றனர். எனினும் அவ்வாறானதொரு தீர்வு அவசியமானதா என்றும் தனக்கு அரசியல் தெரியாது என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களால் நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை, இதற்கு விரக்திதான் காரணம். இலங்கை கிரிக்கெட் நிர்வாகிககள், வீரர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. ஊடகங்களில் இவற்றைக் கூறியும் பயன் இல்லையெனத் தோன்றியது.

அவர்களின் செயற்பாடுகள் என்னை விரக்தியடையச் செய்தது. அதனால் போட்டிகளைப் பார்க்கும் ஆர்வமும் குறைந்தது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers