1 லட்ச ரூபாய் ஆட்ட நாயகன் விருதை குப்பையில் வீசினாரா இந்திய வீரர்? வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதிய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை ஜடேஜா பெற்ற நிலையில் அந்த விருது குப்பைகளை அகற்றும் ஊழியர் கையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வலம் வருகிறது.

கடந்த 1-ஆம் திகதி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஜடேஜா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

பொதுவாக கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆட்ட நாயகன் விருது என்பது ஒரு பெரிய அட்டையில் விளம்பரதாரர் பெயர்களோடு, செக் மதிப்பு குறிக்கப்பட்டு இருக்கும்.

இந்த அட்டையை உண்மையில் வங்கியில் செலுத்த முடியாது. மக்கள் தெளிவாக பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த அட்டை பெரிதாக வடிமைக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்டநாயகன் விருது வாங்கும் வீரருக்கு அதற்கான தொகை வேறு முறையில் வழங்கப்படும்

இந்நிலையில் ஐந்தாவது ஒருநாள் போட்டி முடிந்த உடன் ஜடேஜா 4 விக்கெட்கள் வீழ்த்தியதற்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அதில் ஒரு லட்ச ரூபாய் என மதிப்பிடப்பட்டு இருந்தது. அந்த ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்ட அட்டை இப்போது குப்பையில் கிடக்கிறது

இந்த விருது அட்டை குப்பையில் கிடப்பதை படமாக எடுத்து தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ப்ராக்ருதி என்ற நபர்.

அவர் அதில் இயற்கையை பாதிக்கும் வகையில் இந்த பிளாஸ்டிக் பொருளால் தயாரான விருது அட்டை குப்பையிலே கிடக்கிறது.

மரியாதை அளிக்கும் வகையில் வழங்கப்படும் ஒரு விருதை பிசிசிஐ ஏன் இப்படி வெறும் பிளாஸ்டிக் அட்டையாக வழங்கி, வீரர்களுக்கும் ஞாபகார்த்தமாக இல்லாமல், இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அட்டையை பிடித்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் குப்பை அகற்றும் ஊழியர் தான் இப்போது ஆட்ட நாயகன் எனவும் குறிப்பிட்டு குப்பை அகற்றுபவர்களின் முக்கியத்துவத்தையும் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers