உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை கிரிக்கெட் அணி சாம்பியன்: குவியும் பாராட்டுகள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

காது கேளாதோருக்கான டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 145 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்தியா 17.5 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

இந்நிலையில் வெற்றி பெற்ற இலங்கை காதுகேளாதோர் அணிக்கு குமார் சங்ககாரா, மேத்யூஸ் போன்ற இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers