அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: ரோஹித் ஷர்மாவை பரிந்துரைத்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பிரித்வி ஷாவுக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவை களமிறக்கலாம் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அவுஸ்திரேலியா லெவனுக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் ஆட்டத்தில், காயம் காரணமாக பிரித்வி ஷா பாதியில் வெளியேறினார்.

அவருக்கு கணுக்காலில் தசைநார் கிழிந்ததால், வரும் 6ஆம் திகதி தொடங்கும் அடிலெய்ட் டெஸ்டில் பிரித்வி ஷா இடம்பெற மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பிரித்வி ஷாவுக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவை களமிறக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘பிரித்வி ஷா இல்லாத நிலையில், அந்த இடத்துக்கு ரோஹித் ஷர்மாவை களமிறக்கலாம்.

இது எனது ஆலோசனை மற்றும் விருப்பமாகும். துடிப்பான இளம் வீரர், பிரித்வி ஷா ஆட முடியாதது வேதனை தருகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்