அவள் அழுது போராடினாள்... பலாத்காரம் நடந்தது உண்மைதான்: மனம் திறந்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

அமெரிக்க மொடல் அழகியை அவரது எதிர்ப்பையும் மீறி பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை தான் என கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க மொடல் அழகி மயோர்க்கா வெளியிட்ட தகவல் புயலை கிளப்பியது.

ஆனால் மொடல் வெளியிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொய் எனவும், புகழ் பெறும் நோக்கில் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ரொனால்டோ மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் மொடல் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும், ரொனால்டோ குறித்த மேலதிக தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மட்டுமின்றி இந்த விவகாரம் வெளியே கசியாமல் இருக்க 3 கோடி ரூபாய் வரையிலும் ரொனால்டோ தமக்கு அளித்ததாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது இச்சம்பவம் தொடர்பாக ரொனால்டோவுக்கும் அவரது வழக்கறிஞருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் ஜேர்மனி நாளேடு ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், தாம் பலாத்காரம் செய்தது உண்மை தான் எனவும், அந்த மொடல் தம்மை விட்டுவிட கெஞ்சினார் எனவும் ரொனால்டோ வெளிப்படுத்தியுள்ளார்.

அப்போது 25 வயதேயான மயோர்க்கா மொடலிங் துறையில் அறிமுகமான காலம். ரெய்ன் இரவு விடுதியிலும் அவர் பணியாற்றி வந்துள்ளார்.

பாம்ஸ் ரிஸார்ட்டில் உள்ள பிரபலங்களுக்கான பகுதியில் மயோர்க்காவை தனியாக சந்தித்த ரொனால்டோ, தமது தனிப்பட்ட அறையான எண் 57306-கு இரவு தனியாக சந்திக்க முடியுமா என அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் மாற்று உடை ஏதும் இல்லை என்பதால் தமக்கு வர முடியாது என கூறிய மயோர்க்காவை உடைக்கு ஏற்பாடு செய்கிறேன் எனவும் ரொனால்டோ நிர்பந்தித்துள்ளார்.

இதனிடையே, இரவு ரொனால்டோவின் அறைக்கு தனியாக சென்ற மயோர்க்காவிடம் பாலியல் உறவுக்கு ரொனால்டோ நிர்பந்தித்துள்ளார்.

ஆனால் மயோர்க்கா அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, முத்தம் மட்டும் போதும் விட்டுவிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மயோர்க்காவை நிர்பந்தித்து அவருடன் ரொனால்டோ பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பும் கோரியுள்ளார் ரொனால்டோ.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்