யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை: இந்திய கேப்டன் விராட் கோஹ்லி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, களத்தில் நூறு சதவித உழைப்பை மட்டுமே நம்புவதாகவும், யாருக்குக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் வெளியூர் ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்து வருகிறார்.

இந்நிலையில் தனக்கு இந்திய ஆடுகளங்களுக்கும், வெளிநாடுகளில் உள்ள ஆடுகளங்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்.

PTI

மேலும் அவர் கூறுகையில், ‘நீங்கள் விளையாடும் ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு சுற்றுப்பயணத்திலும், ஒவ்வொரு ஆட்டத்திலும் கற்றுக்கொள்ளலாம். கடைசியாக எனக்கு நானே உறுதி அளித்திருந்தேன் என்று நினைக்கிறேன்.

யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. இவை அனைத்தும் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அணி நினைக்கிறதோ அதைப் பற்றியது தான்.

மைதானத்தில் நான் எனது 100 சதவித உழைப்பை தருகிறேன், இது படிபடியான ஒரு செயல்முறை. இப்போது போன்று நான் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு செல்லும்போது எந்த வித வித்தியாசத்தையும் உணரவில்லை. இந்த செயல்முறை அதிகமாக இப்போதும் இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers