கால்பந்து விளையாட்டின் உயரிய விருதான பலோன் டி’ஓர் விருது வழங்கும் விழாவில், கால்பந்து வீராங்கனையிடம் செக்ஸியாக நடனமாட தெரியுமா என தொகுப்பாளர் பேசுயுள்ள வீடியோ காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிறந்த பத்திரிக்கையாளர்கள் வாக்களித்து தேர்வு செய்யப்படும் வீரருக்கு, கால்பந்து உலகில் பெருமைக்கும், மரியாதைக்கும் உரியதாகக் கருதப்படும், பலோன் டி’ஓர் விருது வழங்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த விருதினை, ஜாம்பவான்கள் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ மட்டுமே மாறி மாறி வாங்கி கொண்டிருந்தனர்.
Martin Solveig really asked Ada Hegerberg, the first ever Ballon D'Or winner, to twerk. The absolute disrespect bruh. pic.twitter.com/Mtc5DBjS7a
— A West (@ayyy_west) December 3, 2018
அதனை தகர்த்து ஆண்கள் சார்பில், 2018-ஆம் ஆண்டுக்கான பலோன் டி’ஓர் விருதை குரோஷியாவின் லூக்கா மோட்ரிச் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த விருது முதன்முறையாக பெண்கள் கால்பந்து வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதன்படி நார்வேயைச் சேர்ந்த 23 வயதான கால்பந்து வீராங்கனை அடா ஹஜிர்பெர்க்குக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. விருதினை பெறுவதற்காக அடா, மேடைக்கு வந்திருந்தார்.
அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மார்டின் சொல்வேஜ், "உங்களுக்கு செக்ஸியாக நடனமாடத் தெரியுமா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அடா, உடனடியாக "இல்லை" என பதிலளித்து முகம் சுளித்தபடியே அங்கிருந்து கிளம்ப முற்பட்டுள்ளார். ஆனால் மற்றொரு தொகுப்பாளர் அதனை சரி செய்து, இயல்பாக மாற்றியிருக்கிறார்.
இந்த விவாகாரமானது இணையத்தளம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தன்னுடைய தவறுக்கு வருந்திய தொகுப்பாளர் மார்டின், தான் பெண்கள் மீது மிகுந்த மாறியதை வைத்திருப்பதாகவும், நகைச்சுவைக்காக தான் அப்படி கூறினேன் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்