கர்ப்பமாக இருக்கிறேனா? முட்டாள் ஆகிவிடுவீர்கள்.. கோபமாக பதிலளித்த அனுஷ்கா சர்மா

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியை காதலித்து கடந்த ஆண்டு மணந்தார் அனுஷ்கா சர்மா.

திருமணத்திற்கு பிறகு, படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் அனுஷ்கா சர்மா, கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஒரு நிகழ்ச்சிக்கு வந்த அனுஷ்காவிடம் இது பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர், அதற்கு அனுஷ்கா, நீங்க என்ன வேணும்னாலும் எழுதலாம். அது படித்துவிட்டு நான் சிரித்துவிட்டு சென்றுவிடுவேன்.

ஆனால் சில நாட்களிலேயே நீங்கள் பொய்யை பரப்புவது மக்களுக்கு தெரிந்துவிடும். அப்போது நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்