மைதானத்தில் ரோகித்சர்மாவை அவமதித்த தமிழக வீரர்: வைரலாகும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், அஸ்வினுக்கு கைகொடுக்க சென்று, ரோகித் சர்மா ஏமாற்றமடையும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அடிலெய்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில், இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

4வது ஆட்டமான இன்று, இந்திய அணி தன்னுடைய இரண்டவது இன்னிங்க்ஸை முடித்து பந்து வீச ஆரம்பித்தது. அப்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், அவுஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் விக்கெட்டை வீழ்த்தினார். அதோடு தேநீர் இடைவேளையும் விடப்பட்டது.

இந்த நேரத்தில் சகவீரர்கள் அனைவரும் அஷ்வினுக்கு கைகொடுத்து பாராட்டினார். அந்த வரிசையில் பேசிக்கொண்டே சென்ற அஷ்வினிடம், ரோகித் சர்மா சென்று கைகொடுக்க முயன்றார். ஆனால் அஷ்வின் அதனை கவனிக்காமல் பேசிக்கொண்டே அங்கிருந்து திரும்பிவிட்டார். உடனே ரோகித் சர்மாவும் தோள்பட்டையில் கையை தட்டியபடி கிளம்புகிறார்.

இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்