சாதனை வெற்றி பெற்ற இந்தியா: தோல்விக்கு இவரே காரணம் என அவுஸ்திரேலிய கேப்டன் புலம்பல்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான போட்டியின் முடிவை தீர்மானித்தது புஜாராவின் பேட்டிங் தான் என அவுஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது.

இப்போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 போட்டி கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

தோல்விக்கு பின்னர் பேசிய அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன், எங்கள் அணியின் பின்வரிசை வீரர்கள் கடைசி வரை போராடியது பெருமையாக இருக்கிறது.

இந்திய அணி இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். நாங்கள் வெற்றி பெற்றிருக்கலாம் என்பதில் மாற்று கருத்து இல்லை.

இந்திய அணியில் புஜாரா ஆடியதை போன்ற இன்னிங்ஸை நாங்கள் ஆடவில்லை. இந்த போட்டியில் புஜாராவின் பேட்டிங் மட்டும்தான் இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் வித்தியாசமாக அமைந்தது.

போட்டியின் முடிவை தீர்மானித்தது அவரது இன்னிங்ஸ் தான் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்