சென்னையில் குவிந்த கிரிக்கெட் பிரபலங்கள்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் என்.ஸ்ரீனிவாசன் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவரான என்.ஸ்ரீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவராகவும், பிசிசிஐ-ன் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்தவர்.

இவர் தன்னுடைய 50 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் வகித்த பல்வேறு பதவிகள் மற்றும் மாற்றங்கள் குறித்த புத்தகத்தினை Coffee Table Book என்னும் பெயரில் வெளியிட்டார்.

இப்புத்தகம் கல்யாணி கந்ததே அவர்களால் எழுதப்பட்டு, மாலவிகா மொஹரா அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கபில்தேவ், டிராவிட், சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

புத்தகத்தின் முதல் பிரதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்க, கிரிக்கெட் வீரர் டோனி பெற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து பேசிய டோனி, சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டதன் மூலம் தென்னிந்திய கலாச்சாரத்தை கற்றுக்கொண்டு கடின உழைப்புடன் கூடிய நிதானமான விளையாட்டை என்னால் வெளிப்படுத்த முடிந்தது.

சென்னை அணி எப்போதுமே கடினமாகவும்,நேர்மையாகவும் விளையாடும். என் ஆக்ரோஷத்தை நிதானபடுத்தி பலமான நேர்மையான கிரிக்கெட் விளையாட தமிழ்நாடு எனக்கு உதவியது எனத்தெரிவித்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers