ஜெயசூர்யா மற்றும் சமீந்தா வாஸ் வரிசையில் இணைந்த இலங்கை வீரர்: என்ன சாதனை தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆல்ரவுண்டராக இலங்கை அணி வீரர் திசாரா பெரேரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரனா திசாரா பெரேரா ஒருநாள் போட்டிகளில் தற்போது வரை 2091 ஓட்டங்களை எடுத்துள்ளதுடன் 165 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் இலங்கை அணி சார்பில் 2000 ஓட்டங்கள் மற்றும் 150 விக்கெட்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது ஆல்ரவுண்டர் என்ற மைல்கல்லை பெரேரா எட்டியுள்ளார்.

ஏற்கனவே இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா 13,430 ஓட்டங்கள் மற்றும் 323 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

அதற்கடுத்து சமீந்தா வாஸ் 2025 ஓட்டங்கள் மற்றும் 400 விக்கெட்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்