டோனிக்காகவே மைதானத்திற்கு நிறைய ரசிகர்கள் வருவார்கள்: புகழ்ந்து தள்ளிய அவுஸ்திரேலிய வீரர்கள்!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் போட்டியில் விளையாட சென்றிருக்கும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனியை, எதிரணி வீரர்கள் அனைவரும் புகழ்ந்து பேசியுள்ளனர்.

இந்திய அணியானது தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அடுத்த நடைபெற உள்ள மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் மூத்த வீரரும், விக்கெட் கீப்பருமான டோனி விளையாட உள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டோனி குறித்து பேசியுள்ள அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் சிறந்த ஒரு வீரர் டோனி தான் என நான் நினைக்கிறேன்.

அதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக சொல்லப்போனால் ஒருநாள் போட்டிகளில் அவருடைய ஆட்டம் சிறப்பானதாக இருக்கும். அவர் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அது பேட்டிங், கீப்பிங் அல்லது கேப்டன் பணி என எதுவாக இருந்தாலும் சரி.

கிரிக்கெட் மிகவும் சிக்கலான விளையாட்டு. ஆனால் இந்த நவீன காலத்திலும் அவர் நுட்பமாக விளையாகிறார் என தெரிவித்துள்ளார்

பாட் கம்மின்ஸ் பேசுகையில், "டோனி எனது பிரதான நினைவைத் துறந்தவர் என நினைக்கிறேன். அவர் ஐபிஎல் போட்டிகள், உலகக் கோப்பை, டெஸ்ட் போட்டிகள், நம்பமுடியாத வெற்றிகள் ஆகியவற்றைப் பார்த்திருந்தாலும், எதுவும் நடக்காததை போல ஸ்டம்பை எடுத்து கொண்டு நடந்து செல்வார்".

அவர் கிரிக்கெட்டிற்கான ஒரு பெரிய தூதராக உள்ளார். பில்லியன் இந்திய மக்களின் வீட்டிற்கு விக்ரஹமாக விளங்குகிறார். மேலும் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களால் அவர் மிகவும் மதிக்கப்படுகிறார் எனத்தெரிவித்துள்ளார்.

உஸ்மான் கவாஜா பேசுகையில், டோனி ஒரு கிரிக்கெட் ஜாம்பவான். அவருடன் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவர் மற்ற விடயங்களை பற்றி கவலைப்பட மாட்டார்.

போட்டியின் கட்டுப்பாடுகளில் தான் அதிக கவனம் செலுத்துவார். கிரிக்கெட்டில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை புரிந்து கொண்டு விளையாடுவார். அவர் இறுதியாக இங்கு விளையாடுவதை பார்க்க நிறைய ரசிகர்கள் கூடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இவர்களை தொடர்ந்து ஒருநாள் போட்டியின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறுகையில், எந்த நேரத்திலும் வெளிப்படையாக விளையாடுவதில் டோனி சிறந்த ஒரு வீரர். இந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு அவர் அவுஸ்திரேலியாவிற்கு வரமாட்டார் என்றால் அது சோகமான நாளாக இருக்கும்.

அவர் ஒரு அற்புதமான பொழுதுபோக்கு ஆட்டக்காரர். மக்கள் அவரை பார்ப்பதற்காகவே பணம் செலுத்திவிட்டு வாயில் வழியாக வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers