பேட்டிங் செய்யும்போதே மைதானத்தில் சுருண்டு விழுந்து இறந்த கிரிக்கெட் வீரர்! அதிர்ச்சி சம்பவம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

கோவா ரஞ்சி கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நேற்று கிரிக்கெட் விளையாடியபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவின் மர்காவோவைச் சேர்ந்தவர் ராஜேஷ் கோட்கே(46). கோவா ரஞ்சி அணியில் விளையாடிய இவர், சமீபகாலமாக அணிக்கு தெரிவாகாததால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்நிலையில், மர்கோவா நகரில் உள்ள மைதானத்தில் ராஜேஷ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். 30 ஓட்டங்கள் சேர்த்து ஆடிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஆடுகளத்தில் சரிந்து விழுந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள், உடனடியாக ராஜேஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மர்காவோ கிரிக்கெட் கிளப்பின் செயலாளர் அபூர்வ பெம்ரே கூறுகையில்,

‘கோவா மாநிலத்துக்காக ரஞ்சிக் கிண்ணப் போட்டிகளிலும், பல ஒருநாள் போட்டிகளிலும் ராஜேஷ் பங்கேற்றுள்ளார். ராஜேஷ் இறந்தது கோவா அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்