உழவே நாட்டின் உயிர்நாடி: தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வீடியோ வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் கலாச்சார கொண்டாட்டங்களில் தனிப்பெரும் பெருமை கொண்ட பொங்கல் விழாவானது இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இயற்கை மற்றும் பிற உயிரினங்களை போன்றும் விதமாகவே இந்த விழா கொண்டாடப்படுகிறது.

தை பிறந்தாய் வழி பிறக்கும் என்பதற்கேற்றவாறு, தை முதல் நாளில் இருக்கும் மகிழ்ச்சி அந்த ஆண்டு முழுவதும் தொடர வேண்டும் என பெரியோர்கள் அனைவருமே கூறுவார்கள்.

இந்த நன்நாளில் ஆண்டுதோறும் உலகமுழுவதுமுள்ள பல தலைவர்கள், பிரபலங்கள் தமிழர்களுக்கு வாழ்த்து சொல்வது வழக்கமான ஒன்று தான்.

அந்த வகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், "விதைத்தவனை வியந்து பார்க்கும் தமிழர்திருநாளில் விஸ்வாசம் என்ற சொல்லுக்கு தலையை கொடுக்கும் தமிழர்களே, சூரியனோடு சூப்பர்ஸ்டாரும் சேர்ந்து உதிக்கும் நாளில், பொங்கும் தைப்பொங்கல் வாழ்வில் செழிப்பை பெருகட்டும். உழவே நாட்டின் உயிர்நாடி என பேட்ட அதிர உணர்த்துவோம்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்