மைதானத்தில் அனைவரையும் கொள்ளை கொண்ட குட்டி ஜான்சன்- வைரல் வீடியோ

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

பிக் பாஷ் தொடரின் மைதானத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறார் வாட்சனின் மகன் ஜூனியர் வாட்சன்.

அவுஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஷ் தொடரின் 8 வது சீசன் நடந்து வருகிறது.

இதன் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் பகிரப்பட்ட வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

இதற்கு காரணம் ஷேன் வாட்சனின் மகன் ஜூனியர் வாட்சன் தான், அடிலெட்டு அணிக்கு எதிரான போட்டியிலேயே இது நடந்துள்ளது.

அந்த போட்டியில் 40 பந்துகளில் 68 ஓட்டங்க்ள வாட்சன் எடுத்திருந்த போது, ஜூனியர் வாட்சன் களத்திற்குள் வர மகனுக்காக தொப்பி, டிஷர்டில் கையெழுத்திட்ட வாட்சன், கட்டியணைத்து முத்தமிட்டார்.

இந்த வீடியோ டுவிட்டரில் வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ரீடுவிட் செய்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்