செஸ் உலகில் உச்சத்தை தொட்ட தமிழ் சிறுவன்: குவியும் பாராட்டுகள்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

தமிழகத்தை சேர்ந்த 12 வயதே ஆன செஸ் வீரர் குகேஷ், கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த பிரக்யானந்தா கடந்த ஆண்டு, 12 வயது 10 மாதங்கள் 13 நாட்களை எட்டியிருந்த போது கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார்.

இந்தச் சாதனையை 12 வயது 7 மாதங்கள் 17 நாட்களை எட்டியிருக்கும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் முறியடித்துள்ளார்.

இதன் மூலம் இந்தியாவில் மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை எட்டியவர்கள் பட்டியலில் குகேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச செஸ் தொடரில் 9 ஆவது சுற்றில் வெற்றி பெற்ற போது, குகேஷ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டினார்.

இதன் மூலம் இந்தியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

உலக அளவில் மிக இள வயதில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டியவர்களில் ரஷ்யாவின் செர்ஜை கர்ஜாகின் முதலிடத்தில் உள்ளார்.

12 வயது 7 மாதங்கள் நிரம்பியிருந்த நிலையில் கர்ஜாகின் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டினார்.

பொங்கல் நாளில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டி இந்தியாவின் 59 ஆவது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள குகேஷ்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers