பெண்கள் பற்றி மோசமான கருத்து: பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு இந்திய ஜாம்பவான் ஆதரவு

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, மற்றும் கே.எல்.ராகுலுக்கு சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹர்திக் பாண்ட்யாவும், கே.எல்.ராகுலும், குதூகலமாக பேசுவதாக நினைத்து பெண்கள் குறித்து தவறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதன் காரணமாக இருவரையும் பிசிசிஐ இடைநீக்கம் செய்துள்ளது. ஆனால் இவர்களுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கங்குலி கூறுகையில், மனிதர்கள் தவறு செய்வது இயல்பு தான்,இருப்பினும் அதைக் கடந்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாமும் வாழ்வதுடன் பிறரையும் வாழ விட வேண்டும் என்றும் சவுரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்