டோனிக்கு நிகரான வீரர் யாரும் இல்லை.. முடிந்தவரை ஆட்டத்தை ரசியுங்கள்: புகழ்ந்து தள்ளிய ரவி சாஸ்திரி

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

டோனியின் கிரிக்கெட் விளையாடும் விதம் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி தொடர்நாயகன் விருதை வென்ற டோனிக்கு, கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, டோனிக்கு நிகரான வீரர் யாரும் இல்லை. அவருக்கு மாற்று கிடையாது. அவரை போன்ற வீரர்கள் 30-40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வருவார்கள்.

அதனால் தான் டோனி ஆடும் வரை அவரது ஆட்டத்தை ரசியுங்கள் என்று நான் இந்தியர்களிடம் சொல்கிறேன். அவர் இல்லையென்றால் அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும்.

ரிஷப் பந்த் இருக்கிறார் என்பது தெரியும். ஆனால் விளையாட்டுக்கு ஒரு தூதராக நீண்ட காலம் தோனி இருப்பது போல் இன்னொருவர் கடினம், இது அபாரம்.

ரிஷப் பந்த்தின் ஹீரோ டோனி தான். அவர் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பார். அது நிச்சயமாக டோனியுடன் தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். டெஸ்ட் தொடரின் போது எங்களிடம் பேசியதை விட, தோனியிடம் அவர் பேசியது தான் அதிகம் என கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட பரஸ்பர மரியாதை மிகப்பெரிய விஷயம். அதே போல் விராட் கோலி, தோனி இருவருக்குமிடையே உள்ள பரஸ்பர மரியாதை நம்ப முடியாத ஒன்று. இதனால் ஓய்வறையில் என் பணி எளிதாகிறது.

நான் அதிகம் வீரர்களின் ஆட்டத்தில் தலையிடுவதில்லை. சில வேளைகளில் கொஞ்சம் ஃபைன் ட்யூன் செய்வேன், தேவைப்பட்டால்தான் அதுவும் கூட. ஆனால் யாராவது ஒரு வீரர் எதைக்கண்டாவது பயப்படுகிறார் என்றால் அவருடைய தலையில் தட்டி சரிசெய்வேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers