எனது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது! வருத்தத்துடன் கால்பந்து ஆசையை கைவிட்ட உசேன் போல்ட்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

உலகின் அதிவேக மனிதன் என்று அழைக்கப்படும் உசேன் போல்ட், கால்பந்து விளையாட்டை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீரரான உசேன் போல்ட், தொழில்நுட்ப கால்பந்தாட்ட வீரராக வேண்டும் என்று கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். அவுஸ்திரேலியாவின் சென்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் அணியுடன் இணைந்து அவர் விளையாடி வந்தார்.

இதுகுறித்து ஜமைக்கா ஊடக வட்டாரங்கள் பலவிதமாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. எனினும், கடந்த மாதம் கால்பந்தாட்ட வீரனாகும் நம்பிக்கை தனக்குள் இன்னும் உயிருடன் இருப்பதாக உசேன் போல்ட் தெரிவித்தார்.

இந்நிலையில், விளையாட்டு வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு வர்த்தகங்களில் இறங்க உள்ளதாக திடீரென அறிவித்துள்ளார். இதுதொடர்பாக உசேன் போல்ட் கூறுகையில்,

‘சரியாக எதுவும் கையாளப்படவில்லை என்று நான் கூற விரும்பவில்லை. ஆனால் அந்த லட்சியத்தை நோக்கி எந்த வழியில் செல்லக் கூடாதோ அப்படி சென்றதாக உணர்கிறேன். நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதனை வாழ்ந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

கால்பந்து ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ஒரு அணியில் ஆடியது மகிழ்ச்சியாக இருந்தது. இது நிச்சயம் தடகளத்தை விடபெரிய வித்தியாசம் கொண்டது என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் இருந்தவரை கேளிக்கையாக இருந்தது.

என் விளையாட்டு வாழ்க்கை முடிந்து விட்டது. வர்த்தகங்களில் இறங்கலாம் என்று முடிவு எடுத்துள்ளேன். வரிசையில் நிறைய விடயங்கள் காத்திருக்கின்றன. இப்போது தொழிலதிபராக வேண்டும் என்ற லட்சியம் வந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்