பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து... பாண்டியா- ராகுலிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் கரண் ஜோஹர்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

தனியார் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து விவகாரம் தொடர்பாக இந்திய வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா, கே.எல்.ராகுலிடம் இயக்குநர் கரண் ஜோஹர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் கேட்ட கேள்விக்கு, பாண்டியா-ராகுல் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த விடயம் கடும் விமர்சனத்திற்குள்ளானதைத் தொடர்ந்து, பாண்டியா மற்றும் ராகுல் இருவருக்கு விளையாடத் தடை விதித்து பி.சி.சி.ஐ உத்தரவிட்டது. எனினும் இச்சம்பவம் குறித்து கரண் ஜோஹர் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கரண் ஜோஹர் அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நடந்த நிகழ்வுகளுக்கு நான் தான் பொறுப்பு என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால் இது என்னுடைய நிகழ்ச்சி. அது என்னுடைய தளம். நான் விருந்தாளிகளாக அவர்களை அழைத்தேன். அதனால் நிகழ்ச்சியின் எதிர்வினைகள் மற்றும் விளைவுகள் என்னை பொறுத்தது.

நான் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். இந்த நிகழ்வு என்னை மீறி நடந்துவிட்டது. அவர்களின் தற்போதைய நிலை குறித்து மிகவும் வருந்துகிறேன். இதுபோன்ற கேள்விகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்கள் உட்பட எல்லோரிடமும் கேட்பது வழக்கம் தான்.

தீபிகா படுகோனே, ஆலியா பட் ஆகியோரிடம் இந்தக் கேள்விகளை கேட்டுள்ளேன். ஆனால், இதுபோன்று நடக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை. இதனால் T.R.P ஏறியிருக்கும். நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என சிலர் கூறுகின்றனர்.

ஆனால், எனக்கு T.R.P பற்றியெல்லாம் கவலையில்லை. இதில் என்னுடைய கெரியரும், பாண்டியா மற்றும் ராகுலின் கெரியரும் அடங்கியுள்ளது.

இந்த நிகழ்வுகளை நினைத்து பல இரவுகள் தூங்காமல் யோசித்து கொண்டிருக்கிறேன். நடந்த சம்பவங்களுக்கு ஹர்த்திக் பாண்டியாவும், ராகுலும் என்னை மன்னிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers