92 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்திய அணி: கிண்டலடித்த வெளிநாட்டு வீரர்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா 92 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில் வெளிநாட்டு வீரர்கள் அதை கிண்டலடித்துள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா 92 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து நியூசிலாந்து அணி எளிதாக 93 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இது குறித்து இங்கிலாந்து அணி முன்னாள் தலைவர் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், 92 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.

இந்த காலத்திலும் 100 ரன்களுக்குள் ஒரு அணி ஆல் அவுட் ஆவதை நம்பமுடியவில்லை என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாக் தனது டுவீட்டில், அணியில் சிறந்த துடுப்பாட்ட வீரர் இடம்பெறவில்லை என்றால் இந்த நிலை தான் என குறிப்பிட்டார்.

விராட் கோஹ்லி அணியில் இல்லாததை தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...