இது ஐசிசி-யின் முட்டாள்தனமான முடிவு! கொந்தளித்த முன்னாள் வீரர்கள்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் மெதுவாக பந்துவீசியதற்காக, மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஹோல்டருக்கு ஐ.சி.சி தடை விதித்ததற்கு, முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன்மூலம் புதிய வரலாற்று சாதனையையும் படைத்தது.

மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஹோல்டரின் அபாரமான ஆட்டம் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தது. குறிப்பாக அவர் தனது முதல் இரட்டை சதத்தையும் விளாசினார்.

இந்நிலையில், ஆண்டிகுவாவில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஹோல்டர் மெதுவாக பந்து வீசியதாக கூறி ஐ.சி.சி தடை விதித்துள்ளது. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் அவர் விளையாட முடியாத ஏற்பட்டுள்ளது.

AFP

ஐ.சி.சி-யின் இந்த தடை நடவடிக்கைக்கு முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே, இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் ஆகியோர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வார்னே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘இந்த டெஸ்ட் போட்டி 3 நாட்களிலேயே முடிந்துவிட்டது. ஹோல்டரை சஸ்பெண்ட் செய்து இருப்பது முட்டாள்தனமான முடிவாகும்.

ஐ.சி.சி-யின் இந்த முடிவை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஐ.சி.சி-யின் இந்த முடிவு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருகிறது’ என தெரிவித்துள்ளார். மேலும் மைக்கேல் வாகன் கூறுகையில்,

‘246 ஓவர்களில் டெஸ்ட் போட்டி முடிந்து விட்டது. அதாவது 2.6 நாளில் முடிந்து உள்ளது. மெதுவாக பந்துவீச்சு என்ற காரணத்துக்காக ஹோல்டருக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது துரதிருஷ்டவசமானது’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல் சமூக வலைதளங்களில் ஹோல்டர் மீதான தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்