விராட் கோஹ்லியின் மனைவி போன்றே அச்சு அசலாக இருக்கும் வெளிநாட்டு பெண்: வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் தோற்றத்தை போன்று அச்சு அசலாக உள்ள அமெரிக்க பாடகியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லியின் மனைவியும், பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மா தோற்றத்தை போன்று கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ் இருப்பதை அனுஷ்கா சர்மாவின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர்.

இதைகண்ட பாடகி ஜூலியா ஆச்சரியமடைந்தார்.

இந்நிலையில், டுவிட்டரில் அனுஷ்கா சர்மாவின் புகைப்படத்துடன் தனது படத்தையும் ஜூலியா பதிவிட்டு, இருவரும் இரட்டையர் போன்று இருப்பதாக கூறியுள்ளார்.

இது, தனக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அனுஷ்கா சர்மா பதில் அளித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers