நான் தெருக்களில் பிச்சையெடுத்து வளர்ந்தவன்: 26 மில்லியனுக்கு அதிபதியான வீரரின் நெகிழ்ச்சி காரியம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

பிரபல கால்பந்து வீரரான மமடு சாக்கோ, தன்னுடைய சிறு வயதுகளில் பாரிஸ் நகர தெருக்களில் பிச்சை எடுத்தாக கூறியுள்ளார்.

லிவர்பூல் அணியின் முன்னாள் கால்பந்து வீரரான மமடு சாக்கோவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் கிரிஸ்டல் அரண்மனை அருகே உள்ள தெருக்களில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

தற்போது ஒரு தொண்டு நிறுவனத்தை துவங்கியிருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல், ஆப்பிரிக்காவில் ஆதரவற்றோர்களுக்கான இல்லம் ஒன்றினை கட்டி வருகிறார்.

இதுகுறித்து பேசியிருக்கும் மமடு, "நான் என்னுடைய குழந்தை பருவத்தில் பாரிஸ் நகர தெருக்களில் வீடில்லாமல் பிச்சையெடுத்து தான் வளர்ந்தேன். நான் இப்போது அதனை திரும்ப கொடுத்து வருகிறேன்.

"திரும்ப கொடுப்பது முக்கியமான ஒன்று. இது பணம் பற்றி மட்டுமல்ல, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நேரம் ஆகும்."

சேல்ஹர்ஸ்ட் பார்க் மைதானத்திற்கு அருகில் க்ரோய்டனில் அதிகமான மக்கள் குளிரில் தூக்கமில்லாமல் தவித்து வருகின்றனர்.

"ஆப்பிரிக்காவில் உருவாகி வரும் ஆதரவற்றோர் இல்லம் மக்களை கவனித்துக்கொள்வதற்கு உதவும் இடமாக இருக்கும் என நம்புகிறேன். அவர்களுக்கு புன்னகையை கொடுக்க விரும்புகிறோம். அவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்து, இந்த உலகம் அவர்களுக்கு தேவை என்பதை காட்ட விரும்புகிறோம்." என தெரிவித்துள்ளார்.

இவருடன் சேர்ந்து ஆதரவற்றோருக்கு உதவி செய்துவரும் மற்றொரு கால்பந்து வீரர் Benteke (28) பேசுகையில், "கால்பந்து வீரர்கள் நல்ல பணத்தை சம்பாதிக்கிறார்கள், அந்த பணத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது மிக முக்கியமான விஷயம்.

மக்கள் வாழ்க்கையை நீங்கள் வெறும் ஐந்து அல்லது 10 சதவிகிதம் மாற்றினால், அது அவர்களுக்கு மிகப்பெரிய கூடுதலாகும். நான் இன்று எவ்வளவு நன்றியுடையவனாக இருக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்வேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers