எல்லை கோட்டிற்கு வெளியில் வந்து டோனி செய்த காரியம்: ஏமாந்து போன விக்கெட் கீப்பர்! வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, விக்கெட் கீப்பரை ஏமாற்றுவது போன்று டோனி விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை வென்று தற்போது 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி பரிதாபமான தோல்வியை தழுவியிருந்தது.

ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகிக்கின்றன.

இந்த நிலையில் போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, 4 வது விக்கெட்டிற்கு களமிறங்கி பொறுமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி கொண்டிருந்தார்.

அப்போது எல்லை கோட்டிற்கு வெளியில் வேகமாக சென்ற டோனி சிக்ஸ் அடிப்பதை போல சென்று பந்தை தடுத்துவிட்டு ரன் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

எப்படியும் பந்து கைக்கு வந்துவிடும், விக்கெட் எடுத்துவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்த நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டிம் சீஃபெர்ட் அப்படியே ஏமாற்றத்துடன் நின்று கொண்டிருக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers