டெல்லியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரை ஆள் வைத்து இரும்பு கம்பியை கொண்டு கொடூரமாக தாக்கிய நபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், டெல்லியில் 23 வயதிற்குட்பட்டோருக்கான அணி தேர்வாளருமான அமித் பண்டாரி மீது மர்ம நபர்கள் 15 பேர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து வேகமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட பண்டாரிக்கு சில மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து பேசிய மருத்துவர், தாக்கியவர்கள் இரும்புக்கம்பி மற்றும் ஹாக்கி மட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். ஆனால் ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ரஜத் சர்மா கூறுகையில், சாத்தியமான பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அனைவரும் தப்பி ஓடி விட்டனர்.
தற்போது இந்த சம்பவம் குறித்த வழக்கு பதிய உள்ளோம். சம்மந்தப்பட்ட அனைவரின் மீதும் கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்