முடிவுக்கு வந்த இந்தியாவின் தொடர் சாதனை

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்ததன் மூலம் இந்தியாவின் தொடர் சாதனை முடிவுக்கு வந்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் 1-2 என்ற கணக்கில் இந்தியா தொடரை இழந்தது, மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனை முடிவிற்கு வந்தது.

இதற்கு முன் இந்தியா 9 இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்திக்காமல் தொடர் வெற்றியை ருசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

மிகக் குறைவான ரன்களில் வெற்றி பெற்ற நியூசிலாந்து

மிகக்குறைவான ரன்களில் நியூசிலாந்து வெற்றி பெறுவது இது நான்காவது முறையாகும்.

கடந்த 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்திலும், 2012-ல் இந்தியாவிற்கு எதிராக 1 ரன்னிலும், 2009-ல் இலங்கைக்கு எதிராக 3 ரன்னிலும் வெற்றிப் பெற்றிருந்தது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers