இணையத்தில் வைரலான ரோகித் சர்மா மகளின் க்யூட் வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித்சர்மாவின் மனைவி வெளியிட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித்சர்மா அவருடைய காதலி ரித்திகாவை கடந்த 2015-ம் ஆண்டு கரம்பிடித்தார்.

ரோகித்சர்மா விளையாட செல்லும் பெரும்பாலான போட்டிகளை காண அவருடைய மனைவி ரித்திகாவும் சேர்ந்து சென்று வந்தார்.

View this post on Instagram

😍🥰❤️

A post shared by Ritika Sajdeh (@ritssajdeh) on

கடந்த மாதம் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியாக இருந்த சமயத்தில், ரோகித்சர்மாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருப்பதாக செய்தி வெளியானது.

இதனால் மேலும் உற்சாகமான ரோகித்சர்மா உடனடியாக குழந்தையை பார்க்க இந்தியா வந்துவிட்டு, மீண்டும் ஜனவரி 8-ம் தேதி அவுஸ்திரேலியா திரும்பினார்.

4வது டெஸ்டிற்கு பிறகு நாடு திரும்பிய ரோகித்சர்மா குழந்தையின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டதோடு, குழந்தையின் பெயர் 'சமைரா' எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் அவருடைய மனைவி ரித்திகா, தன்னுடைய மகள் சமைரா சிரித்து மகிழும் வீடியோ காட்சி ஒன்றினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவானது 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers