பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களை அது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி தனது பதிவில், புல்வானாவில் நடந்த தாக்குதல் செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

இதில் உயிரிழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ரோகித் சர்மா தனது பதிவில், புல்வானாவில் நடந்தது என்னை திடுக்கிட செய்தது, அனைவரும் அன்பை பரிமாறும் நாளில் சிலர் வெறுப்பை பரப்பியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்