தீவிரவாதத்தை ஆதரிக்கும் இந்தியர்களைச் சுட்டுத் தள்ளுங்கள்! பிரபல வீரர் ஆவேசம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

தீவிரவாதத்தை ஆதரிக்கும் இந்தியர்களைச் சுட்டுத் தள்ளுங்கள் என்று இந்திய மல்யுத்த வீரரும் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரருமான யோகேஸ்வர் தத் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

சிஆர்பிஎப் வீரர்கள் 45 பேர் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் செல்லும் வழியில் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள யோகேஸ்வர் தத், புல்வாமாவில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நடந்த சம்பவத்தை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அவர்களைப் பழிதீர்க்க முடியும். அந்த பதிலடி, ஒரு மனிதன் தீவிரவாதியாக உருமாறுவதற்கு முன் அவனை ஆயிரம் தடவை யோசிக்க வைக்க வேண்டும். இதுபோன்ற உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

தீவிரவாதத்தை எந்த இந்தியனாவது ஆதரித்தால், அவனைச் சுட்டுத்தள்ள வேண்டும். இதுதான் ஒரே தீர்வு. வன்முறையை வன்முறை மூலமே தீர்க்க முடியும். தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு எனது அஞ்சலி என்று தெரிவித்துள்ளார் .

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்