கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்த தாய்: வேதனையில் கால்பந்து வீரர் வைத்த கோரிக்கை

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

வளர்ந்து வரும் இத்தாலிய கால்பந்து வீரர் நிக்கோலோ, கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட வேண்டாம் என தன்னுடைய தாய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிக்கோலோ ஜானியோலோ (19) ஒரு இத்தாலிய தொழிமுறை கால்பந்து வீரர் ஆவார். வளர்ந்து வரும் வீரரான நிக்கோலோ ரோமா மற்றும் இத்தாலியின் 21 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து அணியில் மிட்பீல்டராக விளையாடி வருகிறார்.

இறுதியாக இவர் விளையாடிய 6 போட்டிகளில் 4 கோல் அடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இவருடைய தாய் பிரான்செஸ்கா கோஸ்டா, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்திற்கு கீழ், 'போதும் நிறுத்துங்கள்' என நிக்கோலோ பதிவிட்டுள்ளார்.

மேலும், அவருடைய வயது 40 ஆகிவிட்டது என்பதை நியாபகப்படுத்திய நிக்கோலோ, இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடாதீர்கள் என தாய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்