தீவிரவாத தாக்குதல்! பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்: மக்கள் அதிர்ச்சி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

காஷ்மீரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சித்து டிவி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் ஹிந்தி டிவி சேனல் ஒன்றில், 'தி கபில் சர்மா ஷோ' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

தொகுப்பாளர் கபில் சர்மாவுடன் இணைந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான சித்து தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் தாக்குதல் சம்பவம் குறித்து சித்து பேசும் போது, ஒரு சிலர் செய்த செயலுக்காக நீங்கள் ஒட்டுமொத்த நாட்டை (பாகிஸ்தான்) குறை சொல்வீர்களா? தனி நபரை குற்றம்சாட்டுவீர்களா? இது கோழைத்தனமான தாக்குதல்.

இதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன். வன்முறை எப்போதும் கண்டனத்திற்குரியது தான். இதனை யார் செய்தாலும், அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய சித்துவின் செயலை பார்த்து ஏராளமானோர் அதிர்ச்சி அடைந்தனர்.

சமூக வலைதளங்களில் இந்த நிகழ்ச்சிக்கும், சித்துவுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்

இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியிலிருந்து சித்துவை நீக்க சேனல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து சித்து அளித்த விளக்கத்தில் எனது கருத்து மாற்றி கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு மதம், எல்லை கிடையாது எனக் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்