இறந்த மனிதன் அண்டர்டேக்கர் குறித்து வெளியான செய்தி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

WWE-யின் மிகப் பெரிய Wrestling நட்சத்திரமான அண்டர்டேக்கர், இனி போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என வெளியான செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

WWE என்றால் பலருக்கு நினைவுக்கு முதல் ஆளாக வருபவர் அண்டர்டேக்கர் தான். 30 ஆண்டுகளாக WWE-யில் கோலோச்சி வந்த இவர் களத்தில் குதித்தால் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்வார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த Wrestling போட்டிகள் நாடகம் தான் என்று அனைவருக்கும் தெரிய வந்தது. ஆனாலும் அண்டர்டேக்கரின் ரசிகர்கள் அவரை ஆதரிக்கவே செய்தனர். அவரது போட்டிகளை வியந்து பார்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அண்டர்டேக்கர் சோர்ந்து போய் உள்ளார். அத்துடன் அவர் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே ஆடுவதைப் பார்த்த ரசிகர்கள் மிகுந்த வேதனையடைந்தனர்.

இந்த சூழலில் தான் அண்டர்டேக்கர் ரசிகர்களுக்கு பேரிடியாக தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அண்டர்டேக்கர் இனி Wrestling போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும், WWE நிறுவனத்துடன் அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த ஆண்டு நடக்கவுள்ள ரெஸில்மேனியா மற்றும் சவுதி அரேபியா சிறப்பு Wrestling நிகழ்ச்சிகளில் அண்டர்டேக்கரின் பெயர் இதுவரை இடம் பெறவில்லை என தெரிய வந்துள்ளது.

எனினும் இந்த செய்தியை WWE, அண்டர்டேக்கர் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அண்டர்டேக்கர் அடுத்து ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தெரிகிறது. இருப்பினும் WWE திடீரென அண்டர்டேக்கரை களமிறக்கும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்