புல்வாமா தாக்குதல் எதிரொலி! இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் இம்ரான்கான் படம் நீக்கம்?

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவில் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் புகைப்படத்தை நீக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

புல்வாமாவில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், இந்திய துணை ராணுவ வீரர்கள் 45 பேர் வீர மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக பாகிஸ்தான் மீதான கோபமும், எதிர்ப்புணர்வும் இந்தியர்களிடையே அதிகரித்துள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானின் கொடியை சிலர் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய பிரதமருமான இம்ரான் கானின் புகைப்படம் காகிதம் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் விதமாக, இந்திய கிரிக்கெட் சங்கம் இவ்வாறு செய்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் செயலாளர் சுரேஷ் பாப்னா கூறுகையில்,

‘புல்வாமா தாக்குதல் நடந்த மறுநாளே இம்ரான் கானின் புகைப்படத்தின் மீது காகிதம் ஒட்டப்பட்டது. அந்த படத்தை நிரந்தரமாக நீக்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers