கைது செய்யப்பட்ட இந்திய விமானியின் குடும்பத்தை நினைத்து பாருங்கள்! தமிழக வீரர் அஸ்வின் கவலை

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தானில் இந்திய விமானி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் குடும்பத்தின் நிலை என்னாவாக இருக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து இரு நாடுகளின் எல்லை பகுதிகளில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்திய விமானப்படையின் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை பாகிஸ்தானியர்கள் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அபிநந்தன் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழகத்தை சேர்ந்த இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அபிநந்தனின் குடும்பத்தினரின் நிலை எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்