பாண்ட்யா-ராகுலுக்கு சிக்கலை ஏற்படுத்திய நிகழ்ச்சியில் கலந்துகொள்வீர்களா? அஸ்வின் கூறிய பதில்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்வீர்களா என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பதில் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் ‘காபி வித் கரண்’ எனும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

அப்போது பெண்கள் குறித்து அவர் கேட்ட கேள்விக்கு ஹர்திக் பாண்ட்யா சர்ச்சைக்குரிய வகையில் பலளித்தார். இந்த விடயம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானதைத் தொடர்ந்து, வீரர்கள் இருவரையும் பி.சி.சி.ஐ நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.

மேலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வீரர்கள் கலந்துகொள்வது குறித்து அதிருப்தியையும் தெரிவித்தது. இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவற்றில் அஸ்வினின் கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கேள்விகள் இருந்தன. அப்போது ரசிகர் ஒருவர் ‘காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொள்வீர்களா?’ என்று கேள்வியெழுப்பினார்.

அதற்கு அஸ்வின் ‘கண்டிப்பாக’ என்று பதிலளித்தார். அஸ்வினின் இந்த பதில் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அத்துடன் ‘மீண்டும் ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளில் விளையாடுவீர்களா?’ என்ற கேள்விக்கு, ‘தினந்தோறும் என்னை மேம்படுத்திக் கொண்டே இருக்க முயற்சிக்கிறேன். மற்றவை என் கையில் இல்லை’ என தெரிவித்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers