ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டேவிட் வார்னர்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

ஐ.பி.எல் போட்டியில் 25 ஆயிரம் ரசிகர்களுக்கு 500 ரூபாய் டிக்கெட் வழங்குவது குறித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அறிவிப்பை டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் அணி ஐ.பி.எல்-யில் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். அந்த தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய அவர் 848 ஓட்டங்களை குவித்தார்.

ஆனால், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் வார்னர் இடம்பெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு தான் அணிக்கு திரும்புவதை வார்னர் உறுதி செய்துள்ளார். மேலும், சன் ரைசர்ஸ் அணி சொந்த மண்ணில் விளையாடும் முதல் போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்கு டிக்கெட வழங்குவது குறித்த அணியின் அறிவிப்பையும் வார்னர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘நான் டேவிட் வார்னர் பேசுகிறேன். அனைத்து ஆரஞ்ச் ரசிகர்களுக்கும் சிறப்பு செய்தியை சொல்கிறேன். இத்தனை ஆண்டுகளாக அன்பையும், ஆதரவையும் வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி.

எங்களின் ரசிகர்களுக்கு நாங்கள் நன்றியைத் திருப்பி அளிக்கும் தருணம். 25 ஆயிரம் ரசிகர்களுக்கு முதல் நாள் ஆட்டத்தைக் காண 500 ரூபாய்க்கு டிக்கெட் வழங்க சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் போட்டி 29ஆம் திகதி நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை 13ஆம் திகதி ஒன்லைனிலும் நேரடியாக தொடங்குகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்