ஒரே அணியில் 11 விராட்கோஹ்லி இருக்க முடியாது: ஆவேசமாக பேசிய முரளிதரன்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

ஒரு அணியில் 11 விராட்கோஹ்லி இருக்க முடியாது என இந்திய அணியின் தோல்வி குறித்து இலங்கை ஜாம்பவான் முரளிதரன் ஆவேச பதிலளித்துள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-2 என்ற கணக்கில் தொடரில் சமநிலை பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்கார்கள் சிறப்பாக விளையாடியும் கூட, பந்து வீச்சாளர்கள் திறம்பட செயல்படாததால் தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வி குறித்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதேசமயம் இந்திய ரசிகர்கள் கடுமையாக இணையதளங்களில் விமர்சிக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இந்திய அணி தோல்வி குறித்து பேசியுள்ள இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் முரளிதரன், ஒரே அணியில் 11 விராட்கோஹ்லி அல்லது சச்சின் டெண்டுல்கர் அல்லது டான் பிராட்மன்ஸ் இருக்க முடியாது. கோஹ்லி மற்றும் அவரது அணியினர் சிறப்பாகவே செயலபட்டனர்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில், இந்தியா நான்கு மாற்றங்களைச் செய்ததோடு, ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற தவறிவிட்டது. இருப்பினும், இதனை உலகக் கோப்பைக்கு முன் கிடைத்த நல்ல அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒருபோட்டியை வைத்து சுழற்பந்து வீச்சாளர் குல்திப் யாதவ் மற்றும் யூசுவெந்திர சஹால் ஆகியோரின் திறமையை குறைசொல்ல கூடாது. அவர்கள் இருவரும் தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் தான் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசுகையில், இந்திய அணியின் ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஒரு அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது. இரு அணிகளுமே ஆளுக்கு இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ரசிகர்கள், வீரர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers