டோனி இல்லைனா... விராட் கோஹ்லி ஒன்னும் பண்ண முடியாது: அவுஸ்திரேலிய வீரர் ஓபன்டாக்!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

விராட்கோஹ்லி பெரிய கேப்டனாக இருந்தாலும் டோனியின் அனுபவம் தான் அவருக்கு உதவ முடியும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா அணிக்கெதிராக மொகாலியில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, பேட்டிங் வரிசையில் சிறப்பாக ஆடினாலும் கேப்டன்ஷிப் மற்றும் பந்து வீச்சில் சொதப்பியதால் பரிதாபமாக தோல்வியை தழுவியது.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் ஆளுக்கு இருமுறை வெற்றி பெற்று சமநிலைலையில் இருந்து வருகின்றன.

5வது ஒருநாள் போட்டியானது டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெரும் அணி மட்டுமே கோப்பையை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் தீவிரம் காட்ட வாய்ப்புள்ளது.

இறுதியாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு டோனி இல்லாததே காரணம் என இணையதளவாசிகள் பலரும் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே இந்திய அணியில் டோனியின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விராட் கோஹ்லி ஒரு திறமையான கேப்டன். ஆனால் ஆட்டத்தில் அழுத்தம் அதிகரிக்கும்போது விராட்கோஹ்லிக்கு டோனி அனுபவம் உதவியாக இருக்க முடியும். கேப்டன் நினைப்பதை போல ஒரு பக்கம் நன்றாக சென்றுகொண்டிருந்தால் எளிதாக இருக்கும். ஆனால் அதன் மறுபக்கம் கடினமாக இருக்கும் சமயங்களில் டோனி போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த நபர் தேவைப்படுவார்.

டோனி ஒரு மிகசிறந்த வீரர். அணியின் தேவைக்கேற்றவாறு எந்த இடத்தில் இறக்கிவிட்டாலும் விளையாடுவார். என்ன விமர்சித்தாலும் அவர் அதனை கண்டுகொள்ள மாட்டார். உலகக்கிண்ணம் தொடரில் இந்திய அணிக்கு டோனி நிச்சயம் தேவை. பந்துவீச்சின் போது அவருடைய அனுபவம் மற்றும் உதவி விராட்கோஹ்லிக்கு தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்