நியூசிலாந்தில் துப்பாக்கி சூடு: உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் அணி

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

நியூசிலாந்தின் அல் நூர் எனும் மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டிலிருந்து வங்கதேச அணி வீரர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் அல் நூர் எனும் புகழ்பெற்ற மசூதி உள்ளது, இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 300க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி கிரிக்கெட் வீரர்களும் பேருந்தில் தொழுகைக்காக வந்தனர்.

அப்போது கடும் துப்பாக்கி சூடும் சத்தம் கேட்டதால், தரையிலேயே படுக்க வைக்கப்பட்டனர், பின்னர் அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு ஹொட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வங்கதேச அணி வீரரான தமீம் இக்பால், நாங்கள் அனைவரும் துப்பாக்கித்தாரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டு விட்டோம். இந்த அனுபவத்திலிருந்து மீண்டு வருவதற்கு எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என டுவிட் செய்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers