அதிர்ச்சியாக உள்ளது! பலரின் உயிரை பறித்த துப்பாக்கி சூடு குறித்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தின் Christchurch நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா தனது டுவிட்டர் பதிவில், Christchurch -ல் நடந்த துப்பாக்கி சூடு குறித்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மஹேலா ஜெயவர்தேனே தனது பதிவில், Christchurch-ல் நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இந்திய வீரர் அஸ்வின் தனது பதிவில், மனிதகுலத்திற்கு பாதுகாப்பான இடமில்லை, ஏனெனில் இந்த பூமியில் மனிதர்கள் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers