தோனியை எங்கு களமிறக்க வேண்டும்?: அனில் கும்ப்ளேயின் ஆலோசனை

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததை அடுத்து டோனி எந்த இடத்தில் களம் இறங்க வேண்டும் என்பது குறித்து அனில் கும்ப்ளே தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது. இதனால் இந்திய அணி தோல்வி குறித்த கடும்விமர்சனங்கள் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில்,முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தோனியை 4ம் இடத்தில் களமிறக்குவதுதான் சிறந்தது என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே இருந்த போது, இவரது கண்டிப்பான முறைகளில்அதிருப்தியடைந்த விராட் கோலி, இவரை மாற்றுமாறு பிசிசிஐ-யை வலியுறுத்தினார்.இறுதியில் கும்ப்ளே கோலியை வருத்தபட செய்யாமல், தானே தனது பணியை ராஜினாமாசெய்ததோடு, தனக்கும் கோலிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை இன்று வரை வெளியிடாமல்கோலியிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.

இதனை அடுத்து அவர் பெரிய அளவில் கருத்துகள் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில்இந்தியாவின் அவுஸ்திரேலியாவுடனான தோல்வி குறித்து பேசி உள்ளார் அனில் கும்ப்ளே. அதில், கடந்த 2ஆண்டுகளாக இந்தியா அணியின் வெற்றிகளைப் பார்த்தோமனால் முதல் 3 பேட்ஸ்மென்கள் நன்றாக ஆடியதனால்தான் என்று அனைவருக்கும் தெரியும்.

50 ஓவர் போட்டிகளில் முதல் 3 பேட்ஸ்மென்கள்பங்களிப்பு செய்தால்தான் வெற்றி சாத்தியமாகும். என்னைப் பொறுத்தவரை எம்.எஸ்.தோனி4ம் நிலையில்தான் களமிறங்க வேண்டும்.

மேலும் அவுஸ்திரேலியாவுடனான போட்டியில், வீரர்களை மாற்றுவதும், அனுப்புவதுமாக முயற்சி செய்தனர். இதுதான் அணியை நிலையற்றத்தன்மைக்கு இட்டுச் சென்றுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers