இந்தியன் ஓப்பனிலிருந்து விலகிய சாய்னா நேவால்

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் டெல்லியில் துவங்கவுள்ள இந்தியன் ஓப்பன் பேட்மிண்டன் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

சிறுது காலம் உடல்நலன்பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்த சாய்னா பின் விளையாட்டிற்கு திரும்பினார். தற்போது 29 வயதான சாய்னாவிற்கு இங்கிலாந்து தொடரின் போது இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்தவாரம் சுவிஸ் ஓப்பனிலிருந்து வெளியேறினார்.

சிகிச்சைக்கு பின் பேட்மிண்டன் அசோசியேசன் ஆஃப் இந்தியாவிடம் 3,50,000 தொடரில் ஆடவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பேட்மிண்டன் அசோஷியேஷன் அதிகாரி தெரிவிக்கையில், சாய்னாவுக்கு ஆல் இங்கிலாந்து தொடரிலிருந்தே உடல்நலக்குறைவு இருந்தது இதனால் விலகி உள்ளார்என்று தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த வாரம் ஆல் இங்கிலாந்து தொடரின் காலிறுதிக்கு தகுதி பெற்ற சாய்னா, உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...