சிஎஸ்கே, ஆர்சிபி ஆட்டம் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த தகவல்

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

நாளை நடைபெற உள்ள சிஎஸ்கே ஆர்சிபி இடையிலான போட்டி ரசிகர்கள் பார்பதற்கு வசதியான தகவல்கள்.

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 12வது சீசன் நாளை துவங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்திய கேப்டன் கோலி தலைமையிலான ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை அணியும் மோதவுள்ளது.

இதற்கு முன்தாக, 2014ம் ஆண்டு தான் கடைசியாக ஆர்சிபி சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியுள்ளது.

மேலும், சென்னை சேப்பாக்கத்தில் ஆர்சிபி 2008ம் ஆண்டு தான் வென்றது. அதற்கு பின் வென்றதே இல்லை.

இந்நிலையில், இந்த போட்டி ஆர்சிபியின் அதிரடி வீரர்களுக்கும், சிஎஸ்கேவின் சிக்கன பந்துவீச்சாளர்களுக்குமான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் முக்கிய தகவல்கள்

போட்டி நாள்: சிஎஸ்கே, ஆர்சிபி ஆட்டம் மார்ச் 23, 2019 திகதி நடைபெறும்.

போட்டி நடைபெறும் இடம்: சிஎஸ்கே, ஆர்சிபி ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

நேரம்: சிஎஸ்கே, ஆர்சிபி ஆட்டம் இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

ஒளிபரப்பு: சிஎஸ்கே, ஆர்சிபி ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு ரசிக்கலாம்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers