ஆனானப்பட்ட விராட்கோஹ்லியையே திணற வைக்கும் சிஎஸ்கே பந்து வீச்சாளர்: யார் தெரியுமா?

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவில் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் 12 வது சீசனானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியும், இதுவரை கோப்பையை கைப்பற்றாத பெங்களூரு அணியும் மோத உள்ளன. இப்போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானம் நோக்கி படையெடுத்து கொண்டிருக்கின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக 2 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடிய போது விக்கெட்டை இழந்த விராட்கோஹ்லி, ரவீந்திர ஜடேஜாவை பார்த்து முறைத்தபடியே மைதானத்தை விட்டு வெளியேறினார். அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

எந்த ஒரு பந்து வீச்சையும் அடித்து துவம்சம் செய்யும் விராட்கோஹ்லி, ஐபிஎல் போட்டியில் ஜடேஜா வீசிய 96 பந்துகளில் வெறும் 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இருவரும் நேருக்குநேர் 13 முறை சந்தித்ததில் 3 முறை விராட்கோஹ்லி விக்கெட்டினை பறிகொடுத்துள்ளார்.

கடந்த வருடம் விக்கெட்டை பறிகொடுத்த போது கூட விராட்கோஹ்லி, ஜடேஜாவை முறைத்தபடியே மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார். 20 ஓவர் போட்டியில் விராட்கோஹ்லியின் ஸ்ட்ரைக் ரேட் 133.71. ஆனால் ஜடேஜாவிற்கு எதிராக வெறும் 108.33 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers