பைக் ரேஸின்போது களத்திலேயே சண்டை போட்டுக்கொண்ட வீரர்கள்! அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

கோஸ்டா ரிகாவில் நடந்த பைக் ரேஸின்போது, வீரர்கள் இருவர் டிராக்கில் சண்டை போட்டுக்கொண்டதால் இருவருக்கும் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோஸ்டா ரிகாவில் தேசிய பைக் ரேஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. இந்தப் போட்டியில் உருகுவேவைச் சேர்ந்த Jorge Andres Martinez என்ற வீரரின் பைக், Marvin Calvo என்ற வீரரின் பைக்குடன் லேசாக மோதியது.

அப்போது Martinez, Calvoவின் பைக்கில் தொற்றிக் கொண்டார். ஒரு கட்டத்தில் Calvo தனது பைக்கை நிறுத்தினார். உடனே Martinez அவரை தாக்கியதும், பதிலுக்கு Calvoவும் தாக்கினார். இவர்கள் இருவரும் ரேஸ் டிராக்கிலேயே மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சிவப்பு கொடி காட்டப்பட்டது. மேலும் சண்டையிட்டுக் கொண்ட வீரர்கள் இருவருக்கும் 2 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பைக் ரேஸ் டிராக்கிலேயே வீரர்கள் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்